திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆலாடு ஊராட்சி கே. என்.கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழாவானது யாக கலச பூஜைகளுடன் நடைபெற்றது. கலச நீரானது மேல தாலங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோபுர கலசங்களுக்கும் பெருமாளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் மீஞ்சூர் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேணுகோபால் சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர் . இதில் அ.தி.மு.க மாவட்ட கழக செயலாளர் பலராமன் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா கவுன்சிலர்கள் பானுப்பிரசாத்கிருஷ்ண பிரியா வினோத்பாஜக மாவட்ட தலைவர் செந்தில்குமார் பாஸ்கரன் அன்பாலயா சிவகுமார் நந்தன் கோடீஸ்வரன் குமார் மோகன் மற்றும் ஆலய நிர்வாகிகள் ஜானகிராமன் பிரகாஷ் முரளி யுகேந்திரன் ஆகியோர் விழாவை சிறப்பித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு