மதுரை: மதுரை மாநகராட்சி“பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்”மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார். மதுரை மாநகராட்சி மத்திய தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் 3 வார்டு எண்.51, 52, 56, 57 மற்றும் 76 ஆகிய வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிதிட்டப் பணிகள் குறித்து, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் ச.தினேஷ் குமார், ஆகியோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து, சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் 3 வார்டு எண்.52 அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மின்சார வாரியத்தின் மூலம் மின்சார வாரியத்தின் வழியாக செல்லும் பணிகள், வார்டு எண்.52 அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பவர்பைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.124 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடப் பணிகள், வார்டு எண்.51 வடக்கு மாசி வீதி பகுதியில் நவீன கழிவுநீர் உறிஞ்சு வாகனம் மூலம் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்யப்பட்டது.செய்யும் பணிகள், அமைச்சர்,நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மண்டலம் 3 வார்டு, எண்.76 பெரியார் பேருந்து நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாக பணிகள், பெரியார் பேருந்து நிலையத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ளது. பொது கழிப்பறை கட்டிடம் பணிகள், வார்டு எண்.56 ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் உள்ள வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மத்திய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலையரங்கம் மற்றும் வார்டு எண்.57 ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது.
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 12 லட்சம் லிட்டர் கொள்ளளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து , அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, உதவி ஆணையாளர் ரெங்க ராஜன்,மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற்பொறியாளர் பொறியாளர்கள் பாக்கியலட்சுமி, சுந்தரராஜன், சேகர், கல்வி அலுவலர் ரகுபதி, உதவி செயற்பொறியாளர்பொறியாளர்கள் மயிலேறி நாதன், ஜெகஜீவன்ராம், கனி, உதவிப்பொறியாளர் ஆறுமுகம், குழந்தை வேலு, ரமேஷ்பாபு, சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர்கள் கவிதா, ரமேஷ், மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், ஜென்னியம்மாள் மாநகராட்சிஅலுவலர்கள் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி