செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவமனை 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அன்று முதல் 50 மருத்துவ மாணவர்களை கொண்டு 500 படுக்கைகளுடன் இயங்கி வந்தது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 100 மாணவர்களுக்கான அனுமதி பெற்று இயங்கி வருகிறது. இங்கு 1265 பெட்டுகள் கொண்டு தற்போது மருத்துவமனை இயங்கி வருகிறது. இவ்வாண்டு 54 ஆவது பட்டமளிப்பு விழா இக்கல்லூரி கலையரங்கத்தில் இக்கல்லூரி முதல்வர் ஜோதி குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் சிறு குறு துறை அமைச்சர் தா.மோ. அன்பரசு மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் நாராயணசாமி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு 101 மாணவ மாணவியருக்கு மருத்துவர் பட்டங்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கல்லூரி வளர்ச்சியை பற்றி கல்லூரி துணை முதல்வர் மருத்துவர் அனிதா அவர்கள் கூறினர். மற்றும் நன்றியுரை நிலைய மருத்துவர் முகுந்தன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. விழாவில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ். காட்டாங் கொளத்தூர் மாவட்ட ஒன்றியகுழு உறுப்பினர் செம்பருத்தி துர்கேஷ்.கூடுவாஞ்சேரி.மறைமலை நகர். காட்டாங்கொளத்தூர் சேர்மன்கள்,கார்த்திக், சண்முகம், உதயா கருணாகரன், கலந்து கொண்டனர். மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்