செங்கல்பட்டு: செங்கல்பட்டு அதிமுக மேற்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆலப்பாக்கம், மேலமையூர், ஒழலூர், திருவடிசூலம், குண்ணவாக்கம், அஞ்சூர் ஆகிய ஊராட்சிகளில் காட்டாங்குளத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளை நிர்வாகிகளிடம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் ஒன்றிய செயலாளர் கழக செயலாளர் மேலமையூர் இ.எஸ்.கே.சம்பத்குமார் அதிமுக கழக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி ஆலோசனை வழங்கினார் உடன் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கனிதா சம்பத் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம்.ஜி.கே.கோபிக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் இந்நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவர் அஞ்சூர் தேவராஜ், மாவட்ட பிரதிநிதியும், ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருமான கே.சல்குரு, மாவட்ட பிரதிநிதி பி.உமாபதி, ஆத்தூர் சூர்யா, குண்ணவாக்கம் பாலகிருஷ்ணன், என்.ஆர்.வி.சங்கர்,பி.டி.நகர் நியமத்துல்லா, சாதிக், ஒழலூர் முருகன், டி.செல்வம், ரத்தினம், கோழிப்பண்ணை சேகர், திருநாவுக்கரசு, மகேந்திரன், ஜூல்பிகார், கோவிந்தசாமி, அருணாச்சலம், வினோத், அசோக், உட்பட அனைத்து மாவட்ட ஒன்றிய, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்