சிவகங்கை: தமிழ்நாட்டின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவு பேரில் தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் .பெரிய கருப்பன் மேற்பார்வையில் அவர்கள் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் காரைக்குடி மாநகராட்சி மேயர் சே. முத்துத்துரை அவர்கள் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்றிதழும் பரிசுகளும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் காரைக்குடி மாநகராட்சியின் ஆணையாளர் A. வீர முத்துக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். உடன் நகர் நல அலுவலர் டாக்டர் திவ்யா அவர்கள் வருவாய் ஆய்வாளர் பிரேம்குமார் அவர்கள் சண்முகவேல் அவர்கள் சுகாதார ஆய்வாளர் ராமையா அவர்கள் மணிவண்ணன் அவர்கள் மேற்பார்வையாளர் வெங்கடேஷ் அவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் பொறியாளர் செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி