மதுரை: மதுரை, வாடிப்பட்டி வடக்கு ஒன்றியஅதிமுக சார்பில், கச்சை கட்டியில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் வழங்கினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், கச்சை கட்டியில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட பாசறை இணைச் செயலாளர் மு .கா. மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வாடிப்பட்டி மு. காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்வி.கருப்பையா,மாணிக்கம், மகேந்திரன், தவசி,
வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், மகளிர் அணி லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர். பி. உதயகுமார் கலந்துகொண்டு, புதிய உறுப்
பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆலயமணி, விவசாய அணி வாவிடமருதூர் குமார் வி .எஸ். பாண்டி, மலைச்சாமி, மூர்த்தி, சி புதூர் பரந்தாமன், சித்தாலங்குடி ஜெயக்குமார் , ரவி, கிருஷ்ணசாமி , மலைச்சாமி, கர்ணன், குழந்தைவேல், செந்தில், தென்கரை நாகமணி உள்பட வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்பட ஏராளமானோர், கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் வாடிப்பட்டி முன்னாள் கவுன்சிலர் கோட்டைமேடு பாலா நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி