மதுரை: மதுரை கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில், முப்பெரும் விழா ஆனையூர் பேருந்து நிலையம் அருகே திங்களன்று நடைபெற்றது. விழாவில், மத்திய அரசு வழக்கறிஞரும் மாவட்ட தலைவருமான ராஜசிம்மன் தலைமை தாங்கினார். மத்திய அரசு வழக்கறிஞரும் மாவட்ட பொதுச் செயலாளருமான மூவேந்திரன் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர்
கோச எஸ். பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் மற்றும் பேராசிரியரும் மாநில பொதுச் செயலாளருமான ராம்ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், பெருங்கோட்ட பொறுப்பாளர் நாகராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில், பிரதமராக 3 வது முறையாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தனர். மாநில செயற்குழு தீர்மானம் பற்றிய விளக்கம் மற்றும் மத்திய பட்ஜெட் விளக்கம் அளிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தினர். மேலும், மண்டலத் தலைவர் வைரமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர் கண்ணன், மாவட்டப் பொருளாளர் முத்துராம், அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மதுரை கிழக்கு மாவட்டத் தலைவர் ஆதி கணேசன், நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி