திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள அதானி துறைமுகத்தை சுமார் 2300 ஏக்கரில் விரிவாக்கம் பணிகளால் பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரம் அடியோடு இழக்க நேரிடும், அவ்வப்போது கடல் அரிப்பு ஏற்படுவதினால் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கடலில் மூழ்கி அடியோடு அழிந்து போக நேரிடும். மீனவ மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களின் வாழ்வதாரம் நிலையை இழுக்க நேரிடும் என்பதற்காக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்களை சந்தித்து அதானி துறைமுகத்தின் விரிவாக்கப்பட்டால் மக்களின் வாழ்வாதார நிலையை இழப்பதை எடுத்துரைத்து கோரிக்கை மனு அளித்து மக்களுக்காக, மக்களின் ஒருவராக அதனை ஒரு போதும் அனுமதிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டார். உடன் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாநில, மாவட்ட, வட்டார, நகர, மற்றும், நிர்வாகிகள், பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு