சென்னை: அசத்திய 4 ஐஏஎஸ் அதிகாரிகள்.. நாளை “நல் ஆளுமை” விருது வழங்கினார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 4 ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு மருத்துவர் உள்ளிட்டோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை “நல்லாளுமை” விருதுகளை வழங்கினார். காலை உணவுத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ச.திவ்யதர்ஷினிக்கு நல் ஆளுமை விருது வழங்கினார். முதல்வரின் முகவரித்துறையின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் த.வனிதா, விருதுநகர் ஆட்சியர் வீ.ஜெயசீலன், பொது நூலககங்கள் துறை இயக்குனர் க.இளம்பகவத் ஆகியோருக்கும் நல்லாளுமை விருது வழங்கினார். சுதந்திர தினத்தன்று, தமிழக அரசு, ஆண்டுதோறும் நல்லாளுமை விருதுகளை வழங்கி வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான நல்லாளுமை விருது பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தொழில் நுட்ப அலுவலர் முதல்வரின் முகவரித் துறை வனிதா, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் – ஜெயசீலன், பொது நூலகங்கள் துறை இயக்குனர் இளம்பகவத், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திவ்யதர்சினி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குனர் இன்னசெண்ட் திவ்யா, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம், உறுப்பினர் செயலர் மருத்துவர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் நல்லாளுமை விருது பெறுகின்றனர். தமிழக அரசின் மனித வள மேலாண்மைத்துறை செயலர் நந்தகுமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. நல்லாளுமையில் சிறந்த பயன் எய்திட பணியாற்றியவர்கள், வெற்றிகரமாக புதிய உத்திகள், புதிய முயற்சிகள் மற்றும் சிறந்த வழிமுறைகளை செயல்படுத்தியதன் வாயிலாக, பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க சக பணியாளர்களை வழிநடத்துவோர், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்க பணிபுரிந்தோருக்கு ஆண்டுதோறும், நல்லாளுமைக்கான விருது முதல்வரால் சுதந்திர தினத்தன்று மகிழ்ச்சியுடன் வழங்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி