விருதுநகர்: விருதுநகர் ,காரியாபட்டி பகுதியில், நெடுஞ்சாலை துறையின் சார்பில், மரக்கன்றுகள் பராமரிப்பு செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டம், நெடுஞ்சாலை துறையின் சார்பில், சாலை ஓரங்களில் அரசின் பசுமை திட்டம் மூலமாக நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. முதற்கட்டமாக , காரியாபட்டியிலிருந்து – திருச்சுழி செல்லும் மாநில சாலை ஓரங்களில் மரக்கன்றுகள்நட்டு வைக்கப்பட்டுள்ளது. அருப்புக் கோட்டை நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் மேற்பார்வையில், தினமும சாலை பணியாளர்கள் மரக்கன்றுகளை பராமரித்து வருகிறார்கள். இந்த ஆண்டு மாநில சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி