திருவள்ளூர்: மீஞ்சூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும் உள்ளாட்சி பிரதிநிதிகளான ப.அலெக்சாண்டர் .ஜெயலட்சுமி தன்ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவராக .சோனியா துணை தலைவராக .மஞ்சு கல்வியாளராக வழக்கறிஞர் .சுதாகர் முன்னாள் மாணவர்கள் பெற்றோர்களின் பிரதிநிதிகளான திருமதி தங்கமணி திரு முருகானந்தம் திரு வெங்கடேசன் முன்னாள் பள்ளி மாணவர் மேலாண்மை குழு பிரதிநிதி ஜெ.குரு சாலமோன் மற்றும் 14 உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சிறப்பு அழைப்பாளராக வருவாய்த்துறை ஆய்வாளர் திரு புருஷோத்தமன் அவர்கள் கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் . ராமதாஸ் இந்த நிகழ்வை கண்காணிப்பதற்காக அரசு சார்பில் ஆசிரியர் பாலகுரு உற்றுநோக்கராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு