காரைக்கால் மாவட்டத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியரின் தொலை நோக்கு பார்வையுடன் மாணவர்களின் கல்வி மேம்பட ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முனைவர் திரு. மணிகண்டன் இ ஆ ப அவர்களின் தலைமையில் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றன. இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆட்சியரின் கருத்துக்களை கவனமுடன் கேட்டறிந்தார்கள். மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறுகையில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ்தாய் வாழ்த்து கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் மாணவர்களுக்கு போதை பொருளின் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும் மேலும் மாணவர்களின் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட ஆட்சியர் அவர்கள் தீ தடுப்பு பொருட்களை அனைத்து பள்ளிகளிளும் வைக்க வேண்டும் எனவும் மேலும் பேரிடர் ஒத்திகை நிகழ்வுகளை அவ்வப்போது நடத்த வேண்டும் எனவும் மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்தலாம் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள். மேலும் ஆட்சியர் அவர்கள் கூறுகையில் தனியார் பள்ளிகள் சம்பந்தமாக சில புகார்கள் வருகின்றன எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் உங்கள் பள்ளிகளுக்கு மற்றவர்களால் ஏதேனும் பிரச்சனை ஏற்படின் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் எனவும் கேட்டுக் கொண்டார்கள். மேலும் மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன (பேட்டரி) பொருத்திய வாகனங்கள் போன்றவற்றை பள்ளிக்கு ஒட்டி வர அனுமதிக்க கூடாது எனவும் ஆசிரியர்களை கேட்டுக் கொண்டார்கள். மேலும் பெற்றோர்களும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்கள். தனியார் பள்ளிகளில் நீட் வகுப்பு நடைபெற்று வரும் நிலையில் அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அரசு பள்ளிகளிலும் சூப்பர் 30 என்ற நீட் வகுப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கும் கற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள். மேலும் அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் கலந்து கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளை மேம்படுத்த வேண்டும் எனவும் இதன் மூலம் மாணவர்களின் கல்வி வளர்ச்சி மேம்படும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் செப்டம்பர் 5-ஆம் தேதியன்று நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் சிறந்த ஆசிரியர்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் மூன்று வருடம் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்கள். காரைக்கால் மாவட்டத்தில் ஆசிரியர் தின விழா நடைபெறும் பொழுது தனியார் பள்ளி ஆசிரியர்களும் கௌரவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்கள். மேலும் பள்ளிகளில் உள்ளே பட்டாசு போன்ற வெடிப்பொருட்களை மாணவர்கள் வெடிப்பதற்கு அனுமதிக்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்கள். மேலும் தனியார் பள்ளிகளின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் வைக்கையில் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது கனரக வாகனங்கள் அதிகம் சென்று வருவதால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்கள். ஆட்சியர் அவர்கள் உங்கள் பள்ளிகளின் நேரத்தை சற்று மாற்றிக் கொள்ளலாம் எனவும் மேலும் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறையுடன் கலந்து ஆலோசித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள். மேலும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளான சுத்தமான குடிநீர், சுத்தமான கழிவறை, காற்று வசதி, விளக்கு வசதி, விளையாட்டு மைதானம் போன்றவற்றை ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள். நிகழ்வில் மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் திருமதி. ராஜேஸ்வரி முதன்மை கல்வி அதிகாரி திருமதி. விஜயமோகனா ஆட்சியரின் செயலர் திரு. பொன் பாஸ்கர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி