செங்கல்பட்டு: புதுமை, ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் கொண்டாட்டமாக, எஸ். ஆர். எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் இணைய பாதுகாப்புத் துறையால், ஆகஸ்ட் (24-8-2024) அன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சைவர்ஸ் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. இணைய பாதுகாப்புத் துறை தலைவர் செந்தில் குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கி இந்நிகழ்வை தொடக்கி வைத்தார். இன்றைய நவீன யுகத்தில் இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முருகன் விழாவின் தொடக்க உரையை வழங்கி, பங்கேற்பாளர்களுடன் தன் நுண்ணறிவை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட கல்வித் துறை மற்றும் தொழில்நுட்பத் துறை நிபுணர் கமலக்கண்ணன், எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வி மற்றும் தொழில்நுட்பம் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். பரந்த தொழில்நுட்ப நிலப்பரப்புக்கு பங்களிக்க இணைய பாதுகாப்பில் தங்கள் அறிவைப் பயன்படுத்த பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய கணினி சங்கம் சென்னை பிரிவின் முன்னாள் தலைவர் பி.வி. சுப்பிரமணியம் கலந்து கொண்டார். இந்த தேசிய அளவிலான கருத்தரங்கு ஏழு அற்புதமான நிகழ்வுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றும் இணைய பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களில் பங்கேற்பாளர்களுக்கு சவால் விடவும் ஈடுபடுத்தவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு ஏராளமான பங்கேற்பாளர்களை ஈர்த்து, மற்ற கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, இணையப் பாதுகாப்புத் துறை உதவிப் பேராசிரியர்கள் கிரிதரன் மற்றும் நந்தாஶ்ரீ ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த தேசிய கருத்தரங்கு மாபெரும் வெற்றியைப் பெற்றது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்