திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான சான்று வழங்கும் விழா நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக பாமக ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வி. எம். பிரகாஷ், ஒன்றிய குழு பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன், சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு 71 பயனாளிகளுக்கு தலா 3 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கு மற்றும் 142 பயனாளிகளுக்கு அரசு தொகுப்பு வீடுகளை சீரமைக்கும் பணிக்கான ஆணைகளை வழங்கினர்.
அப்போது பேசிய பாமக ஒன்றிய குழு உறுப்பினர் வி.எம். பிரகாஷ் அரசு வழங்கியுள்ள கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டுமான பணி ஆணை பெற்றுள்ள பயனாளிகள் அதற்கான பணிகளை சிறப்பாக செய்து முடித்தால் தொடர்ந்து இது போன்ற பல்வேறு நல திட்ட உதவிகளை அரசு மக்களின் பயன்பாட்டிற்காக தொடர்ந்து கொண்டுவரும் என்றும் எனவே மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு தரமாக சென்று அடைய வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தினி ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி ரமேஷ் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு