மதுரை: அலங்காநல்லூர் குறு வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் வாடிப்பட்டியில் நடந்தது. இப்போட்டிகளில் காடுபட்டி உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த நிரஞ்சனா 17 வயது மாணவிகள் பிரிவில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும்,100 மீ தடை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், கோல் ஊன்றி தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும்,
இதே பிரிவில், அஜிதா மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், சர்மிளா 400 மீ ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், அவர்களுக்குப் பயிற்சி அளித்த உடற் கல்வி ஆசிரியர்கள் வெள்ளைச்சாமி, சந்திர மோகன் ஆகியோரை தலைமை ஆசிரியர் சரவணக்குமார், உதவி தலைமை ஆசிரியை ராஜலக்ஷ்மி வாழ்த்தி பாராட்டினார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி