திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில்அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாம வள்ளி உடனுரை சம்பங்கி பிச்சாண்டீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. யாக கலச பூஜைகளுடன் கலச நீரானது மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாககொண்டுவரப்பட்டு ராஜகோபுரத்திற்கும் காலத்தீஸ்வரர் வள்ளி முருகன் அண்ணாமலையார் கைலாசநாதர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது . பின்னர் பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது. இதில் பெரியபாளையம் பொன்னேரி கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆரணி பேரூராட்சி துணை தலைவர் சுகுமார் பேரூர் செயலாளர் பி.முத்து பொருளாளர் கரிகாலன் கவுன்சிலர் ரகுமான் வார்டு செயலாளர் நீலகண்டன், கு.சந்தோஷ் பிரபா, மற்றும் ஜி.என்.ரவி கோவில் நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு