திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தேமுதிக பொதுச் செயலாளர்
பிரேமலதா மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
அரசுப் பள்ளியில் சொற்பொழிவாற்ற யார் அனுமதி கொடுத்தது என்ன சொற்பொழிவு ஆற்றினார். என்பது இரண்டாவது கருத்து இது போன்ற செயல்களை ஊக்குவிக்கக்கூடாது மாணவர்கள் கல்விகற்கும் இடத்தில் கல்வியை மட்டுமே போதிக்க வேண்டும் மதத்தை போதிக்கக்கூடாது மூடநம்பிக்கைகளை போதிக்கக்கூடாது இது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம் என்றும் உதயநிதியை துனை முதல்வர் ஆக்குவது குறித்து மூத்த அமைச்சர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கே என் நேரு தெரிவித்துள்ளதாகவும்
அவர்கள் கட்சியில் ஏற்றுக் கொண்டால் எங்களுக்கு ஒன்றும் இல்லை இதை
மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது வருகிற 2026 தேர்தலில் தெரியும் என்றும் தெரிவித்தார்.
முதல்வர் முதலீடுகளை ஈர்த்துக் கொண்டு வந்தால் வாழ்த்துக்கள் இதனால் பல லட்சம் வேலைவாய்ப்பு இளைஞர்களுக்கு வரும் துபாய் சிங்கப்பூருக்கு சென்ற முதல்வர் என்ன கொண்டு வந்தார். எத்தனை தொழிற்சாலைகள் உள்ளது என கேள்வி இருக்கிறது. என்றும்
முதல்வர் சிகிச்சைக்கு சென்றாரா. முதலீடு ஈர்க்க சென்றாரா என்கிற கேள்விக்கு பதிலை மக்களிடம் விட்டு விடுகிறேன் தேமுதிக விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து
விஜய்யிடம் கேளுங்கள் எங்கள் கட்சி ஆரம்பித்து 20 வருடங்கள் ஆகிறது
ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமையுள்ளது. அனுமதி கேட்பது அவர்கள் உரிமை அதை கொடுப்பது அரசின் கடமை பொதுக்கூட்டம் மாநாடு நடத்தக்கூடாது என இவர்கள் சொல்ல முடியாது அனுமதி கொடுத்து பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை
நாங்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் எங்கெல்லாம் போட்டியிடுகிறோம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் அதானி துறைமுக விரிவாக்கத்தால் மீனவர்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கட்சதீவை மீட்டால் மட்டுமே மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.தேமுதிக நிர்வாகிகள் எல் கே சுதீஷ் ,டில்லி ராஜேந்திரன், தனஞ்செயன், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு