திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கூட்டுச்சாலையில் புரட்சி பாரதம் கட்சியின் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சார்பில் வழக்கறிஞர் கார்த்திக்
தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சண்முகப்ரியன் வரவேற்புரையாற்றினார். துரைமுருகன்,பரமானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். பெரவள்ளூர்.சே.ராஜா கலந்து கொண்டு புரட்சி பாரதம் கட்சியினர் மத்தியில் உரையாற்றி பின் அருகாமையில் நடைபெற்ற புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ மற்றும் மேஜிக் ஓட்டுனர்கள் சங்க பெயர் பலகையினை திறந்து வைத்தார். இதில் வழக்கறிஞர் மயில்ராஜ்,வழக்கறிஞர் ராஜசேகர், ஹரி மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், புரட்சியாளர் அம்பேத்கர் ஆட்டோ மற்றும் மேஜிக் ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு