விருதுநகர்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்* சிறப்பான திட்டங்கள் அனைத்தும் சாமானிய பொதுமக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இராஜபாளையம் தொகுதியில் கிராமம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகள் என பல்வேறு இடங்களில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களின் ஏற்பாட்டில் முலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் அடையாள அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது அதில் 11625 பயனாளிகள் பதிவு செய்தனர், தற்போது அவர்களுக்கான அட்டையும் வந்துள்ளது. இம்முகாமில் கலந்துகொண்டு பதிவு செய்ய பயனாளிக்கு அட்டை வழங்க ஏதுவாக முகாம் நடைபெற்ற அந்தந்த கிராமத்திற்கே அல்லது இடத்திற்கே MLA அவர்கள் நேரில் சென்று வழங்கவுள்ளார்.
அதில் முதல்கட்டமாக இன்று வடக்கு தெற்கு தேவதானம் ஊராட்சியில் 364 பயனாளிகளுக்கு பல்வேறு தெருக்களில் வீடு வீடாக சென்று நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் பயனாளிகளுக்கு முலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் அடையாள அட்டையை வழங்கினார். இந்நிகழ்வில் MLA அவர்கள், * தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 5 லட்ச ரூபாய் மதிப்பீனாலான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கியுள்ளார்* அதனை பொதுமக்கள் சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் மேலும் அதிகாரிகளையும் திட்டங்களையும் மக்கள் தேடி சென்ற காலம் போய் இல்லம் தேடி கல்வி மக்களை தேடி மருத்துவம் மக்களுடன் முதல்வர் என பல்வேறு திட்டங்கள் மூலம் மக்களை தேடி அதிகாரிகளையும் திட்டங்களையும் சென்றடைய செய்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான்* என பயனாளிகளிடம் கூறினார். அதற்கு பதலளித்த பயனாளி ரேனுகாதேவி அவர்கள் இச்சிறப்பான ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களை தெரிவிப்பதாக கூறினார். மேலும் இக்காப்பீடு அட்டையைகூட MLA யான தாங்கள் நேரில் வந்து தருவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
அதனைத்தொடர்ந்து தேவதானம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் வைத்தும் பயனாளிகளுக்கு காப்பீடு திட்டத்தின் அட்டை வழங்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் MLA அவர்கள் குறைகளையும் கேட்டறிந்து அதனை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளுவதாகவும் கூறினார். இந்நிகழ்வில் கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட், ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன் கண்ணன், கிளை செயலாளர்கள் அரிராம்சேட், பூச்சி (எ) இருளப்பன் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி