மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார். குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யும் ஆப்ரேட்டர் திரு.குமார் பூனாசுமுருகன் அவர்கள் பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தார். அப்பகுதி மக்கள் அவரை பாராட்டினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது