சிவகங்கை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தல் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு-II (தொகுதி II-, தொகுதி II A) தேர்வினை, சிவகங்கை பகுதியில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தல் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு-II (தொகுதி II-, தொகுதி II A) தேர்வினை, இன்றையதினம் (14.09.2025) சிவகங்கை பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தல் இன்றையதினம் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு-II (தொகுதி II-, தொகுதி II A) தேர்வு சிறப்பாக நடைபெறுகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய 3 தேர்வு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சிவகங்கை மண்டலத்தில் 22 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்விற்கு விண்ணப்பித்த 6,341 தேர்வாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில், 4,783 (75%) தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 1,558 நபர்கள் தேர்விற்கு வரவில்லை.
அதேபோன்று, தேவகோட்டை மண்டலத்தில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்விற்கு விண்ணப்பித்த 1,648 தேர்வாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில், 1,187 (72%) தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 461 நபர்கள் தேர்விற்கு வரவில்லை.
அதேபோன்று, காரைக்குடி மண்டலத்தில் 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்விற்கு விண்ணப்பித்த 5,211 தேர்வாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில், 3,760 (72%) தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 1,451 நபர்கள் தேர்விற்கு வரவில்லை.
சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்ட 3 மண்டலங்களில் மொத்தம் 13,200 தேர்வாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பபட்டதில், 9,730 (74%) தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 3,470 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. மேலும், தேர்வு மையங்களை கண்காணித்திட 14 நடமாடும் கண்காணிப்புக் குழுக்களும், 05 பறக்கும் படை குழுக்களும், 43 அறை கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கருவூலகத்திலிருந்து வினாத்தாட்களை தேர்வு மையத்திற்கும், தேர்வு முடிவுற்ற பின் விடைத்தாட்களை கருவூலகத்திற்கும் எடுத்துச் செல்லும் 1 துணை வட்டாட்சியர், 1 காவல் துறை சார்பு ஆய்வாளர், 1 காவலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர, மொத்தம் 46 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்கு வந்து செல்ல தேவையான போக்குவரத்து வசதிகள், தடையில்லா மின்வசதி, காற்றோட்டமான தேர்வு அறை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டு, தேர்வாளர்கள் எவ்வித இடர்பாடின்றி தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்
துள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி