திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவிலில் தீமிதி விழா இன்று நடைபெற்றது. பக்தர்கள் காப்பு கட்டி பத்து நாட்களாக விரதம் இருந்து அலகு குத்தியும் தீசட்டி பூங்கரகம் ஏந்தியும் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர் .
வானவேடிக்கையுடன் தீமிதி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பழவேற்காடு பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் தர்மகர்த்தாக்கள் கேபி தர்மலிங்கம் கேசி பக்தவச்சலம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தீமிதி விழாவை சிறப்பித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு