சிவகங்கை: தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் சங்கர் அவர்களிடம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள் அளித்த கோரிக்கையினை ஏற்று வெள்ளிப்பட்டி கிராமத்தில் இருந்து காரைக்குடி – கண்டனூர் – புதுவயல்- மித்திரங்குடிவிலக்கு – பெத்தாச்சி குடியிருப்பு – முள்ளாங்காடு வழியாக வெள்ளிப்பட்டி வரை செல்லும் பேருந்தினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் சரவணன், போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் வட்டாரத்தலைவர் செல்வம், ஊராட்சி உறுப்பினர் செந்தில், கணேசன் சின்னத்துரை, பாண்டித்துரை, புதுவயல் மீரா, ஜெயப்பிரகாஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி