திருவள்ளூர் : திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட செயலாளர் நெய்த வாயல் வினோத் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள லவ் பவுண்டேஷன் ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு மதிய உணவினை வழங்கினார். இதில் மீஞ்சூர் கிழக்கு வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், பல்வேறு காடுஜெயசீலன்,லவ் பவுண்டேஷன் நிறுவனர் செல்வராஜ், செயலாளர் பிரின்ஸ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு