செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சுத்தம் செய்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள். சதுரங்கப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அடர்ந்து புதர் மண்டி விஷ ஜந்துக்கள் நடமாடும் இடமாக இருந்த பகுதியை மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளி தலைமை ஆசிரியர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் சதுரங்கப்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் இணைந்து சுத்தம் செய்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்