சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சி தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் மற்றும் முன்னாள் அமைச்சர் மு.தென் னவன் தலைமையில் நடைபெற்றது. காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்து துறை துணை மேயர் குணசேகரன் சிவகங்கை மாவட்ட கலை இலக்கிய குழு செயலாளர் காரை சுரேஷ், சிவகங்கை மாவட்ட கலை இலக்கிய குழு இணைச் செயலாளர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் சோனா கண்ணன் சித்திக் ஆகிய கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை திறந்த முறையில் திறம்பட ஏற்பாடு செய்த தமிழ்நாடு கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் செந்தில் குமார் அவர்களை தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் அவர்கள் பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி