திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜாஜி நகரில் சிறுவர் பூங்கா திறக்கப்பட்டது. அத்திப்பட்டு மற்றும் நந்தியம்பாக்கம் ஊராட்சிகளுக்கு மத்தியில் ராஜாஜி நகர் பகுதியில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு நிதியின் கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்கான திட்ட மதிப்பீட்டில் ரூபாய் 5 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு அதனை ஒன்றியக்குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி திறந்து வைத்தார். அத்திப்பட்டு ராஜாஜி நகர் குடியிருப்போர் நல சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சௌரிராஜன் வரவேற்க மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி செயற்பொறியாளர் முத்துலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கதிரவன், சங்கீதா அன்பழகன் தலைமை கழக பேச்சாளர் சாம்ராஜ் மற்றும் கழக முன்னோடிகள் சந்தானம், அன்பு, தன்ராஜ், சாகுல் பாய், சந்தோஷ், அன்பு, சுந்தரம் முன்னாள் கவுன்சிலர் ஜோதி நந்தியம்பாக்கம் வார்டு உறுப்பினர் குணசுந்தரி மற்றும் ராஜாஜி நகர் பொது நல சங்க தலைவர் ராஜா பொருளாளர் விஸ்வநாதன் சங்க உறுப்பினர்கள் அண்ணாதுரை பாஸ்கர் மற்றும் ஊர் பொதுமக்கள், சிறார்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு