செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்தூர்
பக்தவச்சலம் உயர்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை செங்கல்பட்டு மாவட்டம் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அங்குள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அரசு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
இதில் காட்டாங்கெளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் உதயாகருணாகரன் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் மற்றும் ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கௌதமன் ஒன்றிய கவுன்சிலர் ஷீலா தணிகாசலம். துணைத்தலைவர் இந்துகுமார்மற்றும் கிளை செயலாளர்கள் மூர்த்தி. தணிகாசலம், வேலாயுதம், சுகுமார், மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர் அறிவழகன், வார்டு உறுப்பினர்கள் ஜெயபால், கமலக்கண்ணன், ஜெயகாந்தன், சுதாகர், தென்னரசு, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில்அரசு மருந்து மற்றும் இலவசமாக அனைத்து வகையான பரிசோதனைகளை செய்து கொண்டு பயன்அடைந்தனர். இதில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.