திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சியில் பாரதிநகரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டு படி பயின்ற பள்ளி மாணவ மாணவிகள் பள்ளியில் அவர்கள் 22 ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் பயின்ற பள்ளியின் கட்டிடத்திற்கு வண்ணம் பூசியும் ஜன்னல் மின்விளக்கு வசதி உள்ளிட்டவற்றை அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தும் தங்களின் ஆசிரியர்களாக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியர்களை அழைத்து வந்து அதனை ரிப்பன் வெட்டி கைத்தட்டி ஆரவாரத்துடன் திறந்து வைத்து அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி 22 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் பங்கேற்று தங்களது முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
முன்னாள் மாணவர்கள் தாங்கள் பள்ளியில் படித்த காலங்களில் கடை பிடிக்கப்பட்ட சீருடை வண்ணங்களில் கருப்பு வெள்ளை சீருடை அணிந்து மாணவர்களும் மற்றும் நீல நிற ஆடை அணிந்து மாணவிகளும் வந்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் பா. ஜெயம்மாள் தசரதன் செல்வராஜ் தமிழ்ச்செல்வி சத்துணவு அமைப்பாளர் பாஸ்கரன் தற்போது பணி புரியும் ஆசிரியர்கள் வெங்கு ஆசிரியை ஜெயலட்சுமி தலைமை ஆசிரியர் பத்மநாபன் துணை தலைமை ஆசிரியர் அமிர்தராஜ் ஆகியோர் இதில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர். பின்னர் அனைவருக்கும் அருசுவை உணவு வழங்கினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு