செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஜி.கே.எம் வித்யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளியின் 14 ஆம் ஆண்டு விழா பள்ளி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக செந்தமிழ்செல்வி B.S.M.S . DVM , DPK. சித்த மருத்துவர் , பள்ளியின் தாளாளர் மற்றும் G.K.M கல்வி குழுமங்களின் தலைமை செயல் அலுவலருமான DR.K. சுஜாதா பாலசுப்பிரமணியன் மற்றும் பள்ளியின் முதல்வர் MS.A. ஜோஸ்பின் ஆர்த்தி விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த ஆண்டு விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இதனை அடுத்து இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. மேலும் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களும் அன்புடன் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டனர். ஆண்டு விழாவின் இறுதியில் விழா சிறப்பாக நடைபெற உதவிய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு ஆம் 14 ஆண்டு விழா இனிதே நிறைவுற்றது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்