மதுரை: மதுரை, அக்.20- மதுரை அண்ணாநகரில் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் மஞ்சுளா தேவி தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திர பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில பொது செயலாளர் கவிதா வரவேற்று பேசினார். விழாவில் மதுரை திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. விழாவில் சட்ட ஆலோகர் செல்வம், ஒருங்கிணைப்பாளர் தங்கதுரை , திண்டுக்கல் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை மதுரை மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, செயலாளர் வித்யா உள்பட பலர் செய்து இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி