மதுரை: மதுரை அருகே, திருவேடகம், விவேகானந்த கல்லூரியின் அகத்தர உறுதி மையம் சார்பில் ‘கல்லூரிப் பேராசிரியர்களுக்கான, உணர்வுசார் நுண்ணறிவின் முக்கியத்துவம்’
என்ற தலைப்பில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.சதீஷ்பாபு வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த மற்றும் துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்
கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ராம ஸ்ரீனிவாசன் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர் உணர்வுசார் நுண்ணறிவின் முக்கிய கூறுகளான சுய விழிப்புணர்வு, சுய கட்டுப்பாடு, பச்சாதாபம், சமூக திறன்கள், உந்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். என் முக்கியத்துவத்தை அறிந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று உரையாடினார். கல்லூரித் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் பி.ஜெயசங்கர் நன்றி கூறினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கோ.
பாலமுருகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி