புதுச்சேரி வணிகத் திருவிழா வியாபாரிகள் அதிகமாக பங்கேற்க வேண்டும் அமைச்சர் திருமுருகன் காரைக்காலில் புதுச்சேரி வணிக திருவிழா சுற்றுலாத்துறை மற்றும் சேம்பர் ஆப் காமர்ஸ் வணிகர் சங்கங்கள் வியாபார வளர்ச்சிக்காக ரூபாய் ஒன்பது கோடியில் பரிசுப் பொருள்கள் அறிவிப்புடன் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. விழா சிறப்பாக நடைபெற முன்னதாக காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வளாகத்தில் வியாபாரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அமைச்சர் திருமுருகன் சார் ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் .முதுநிலை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் சுப்பிரமணியன் காரைக்கால் நகராட்சி ஆணையர் சத்தியா பொதுப்பணித்துறை பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் ஹோமின் பஞ்சாயத்து அதிகாரிகள் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது அமைச்சர் திருமுருகன் கடந்த ஆண்டு நடைபெற்ற வணிக விழாவை தொடர்ந்து இந்த ஆண்டும் தொடர்ந்து வெற்றி பெற செய்ய வேண்டும் இதற்கு அனைத்து அதிகாரிகளும் மற்றும் வியாபாரிகளும் முழு ஒத்துழைப்புக்கு வழங்க வேண்டும் சென்ற ஆண்டு காரைக்கால் பகுதியில் 179 வியாபாரிகள் உறுப்பினராக இருந்தனர். இந்த ஆண்டு 500 வியாபாரிகள் இருப்பார்கள் என நம்புகிறேன் இருந்தாலும் கிராமப்புற வியாபாரிகள் அனைவரும் இதில் பங்கேற்க முன்வர வேண்டும் காரைக்காலுக்கு மட்டும் 15 கார்கள் 30க்கும் மேற்பட்ட மோட்டார் பைக்குகள் கிடைக்கும் என்று பேசினார். இவ்விழா புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மற்றும் சேப்பர் ஆப் காமர்ஸ் இணைந்து நடத்துகிறது. இதற்கான திறப்பு விழா காரைக்காலில் (21-10- 24) தோப்புல நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி