மதுரை: தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு , வணிகவரி மற்றும் பதிவுத்
துறை அமைச்சர் பி மூர்த்தி , தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அருண் தம்புராஜ் , மதுரை செல்லூர் கண்மாய் மற்றும் வாய்க்கால் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு , மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் , மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ்குமார், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி ,, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் , சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அமைச்சர்கள், சாலையில் பெருக்கெடுத்து தண்ணீரில் நடந்து சென்று ஆய்வு செய்தனர். மதுரையைப் பொறுத்தவரை, பல வார்டுகளில் கழிவு நீர் மட்டும் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஆடுவதை காண முடிகிறது. காரணம், கழிவுநீர் கால்வாய் அவ்வப்
போது, மாநகராட்சியால், தூர்வாரப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு மாநகராட்சி செய்வது இல்லை என, தெரிகிறது. மேலும், பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் ஆனது திறந்த வெளியிலே செல்வதால் அப்பதியில் வசிக்கின்ற பொதுமக்கள் மாட்டு சானங்கள் போடுவதால், பாலீதின் குப்பைகளை பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் மற்றும் கழிவு நீர் சாலையிலே பெருக்கெடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே, மதுரை மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்ட் தளங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும்,
மதுரை நகரில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி ஆர்வம் காட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி