செங்கல்பட்டு: மறைமலைநகர் அடுத்த கலிவந்தபட்டு கிராமத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில், அக்., 28 முதல் நவ.,3 ம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, ஒருமைப்பாட்டின் கலாச்சாரம் தேசத்தின் செழுமைக்காக’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தில் நேற்று நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, நிறுவனத்தின் துணை பொது மேலாளர் தனபால், தலைமை தாங்கினார். இதில் கருநிலம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது எங்கு சென்று புகார் அளிப்பது, ரகசியம் பாதுகாக்கப்படும் முறைகள், குறித்து அதிகாரிகள் விளக்கி கிராம மக்களிடம் கூறினர். தொடர்ந்து லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கருநிலம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்