மதுரை: விவேகானந்த கல்லூரியின் அகத்தர உறுதி மையம் மற்றும் வரலாற்றுத்துறையும், மதுரை, வாடிப்பட்டி வட்டார சட்ட சேவைக் குழுவுடன் இணைந்து மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வு வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு இறைவழிபாட்டுக் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குக் கல்லூரியின் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.சதிஷ்பாபு வரவேற்புரையும், கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் கே.கார்த்திகேயன் தலைமையுரையும், வழங்கினர். இந்நிகழ்விற்கு, கல்லூரிச் செயலர்சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத் மானந்த ஆகியோர் ஆசியுரை வழங்கினர். இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக, மாவட்ட உரிமையியல் நீதியரசர் எம்.பி.இராம்கிஷோர் (மாவட்ட முன்சீப் நீதிமன்றம், வாடிப்பட்டி) மூத்த கறிஞர்கள் திரு. ராதாகிருஷ்ணன், முத்துமணி, இராமசாமி, மற்றும் வழக்கறிஞர்கள் திரு. வெள்ளைச்சாமி, விஜயகுமார், சீனிவாசன், வழக்கறிஞர் சுமிதா ஆகியோர் சட்ட விழிப்புணர்வு குறித்து உரை வழங்கினர். இந்நிகழ்விற்கு, வரலாற்றுத்துறையின் உதவிப் பேராசிரியர் திரு வீ.முருகன் நன்றியுரையும், வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சி.பாண்டீஸ்வரன் தொகுத்தும் வழங்கினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி