சிவகங்கை: ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள், தகுதிகளின் அடிப்படையில் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகள் பெற்று பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) காரைக்குடி கிளையில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் 7% சதவிகித வட்டியில் ரூபாய் 20 இலட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கும் புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வழங்கப்பட உள்ளது. கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் கடன் பெற குறைந்தபட்ச வயது (18) ஆகவும், அதிகபட்ச வயது (65) க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தாய்கோ வங்கி கிளையில் கணக்கு வைத்து இருத்தல் வேண்டும். மேலும், புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமல் மற்றும் இரண்டு ஆண்டுகளாக ஏற்கனவே லாபத்தில் இயங்கும் நிறுவனங்களும் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி