மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம், உசிலம்பட்டி வளர்ச்சி மையம் மற்றும் உசிலை நகர அரிமா சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய உசிலம்பட்டி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே பல் திறன் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற சுமார் 500 மாணவ மாணவியர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, பொது அறிவு போட்டி உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்தப் போட்டிகளை, தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையத்தின் செயலாளர் ஜெயராமன் தலைமையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் ராஜியக்கொடி மற்றும் முன்னாள் மாவட்ட அரிமா ஆளுநர் அறிவழகன், புலவர் சின்னன் முன்னிலையில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுடலைமுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். போட்டியில், வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது மேலும், ஏழு பிரிவுகளில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக 3000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 2000 ரூபாயும் மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். இதில், அமுதா ஜெயராஜா, தமிழ் ஒளி தமிழரசன், உசிலை அரிமா சங்க நிர்வாகிகள் பிரேம்குமார், பத்மநாபன், கார்த்திகேயன், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய நிர்வாகிகள் மோகன்ராம், பகவதி ராணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி