மதுரை: மதுரையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில், பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் பணி நிரந்தரம் செய்யக் கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை மாவட்டத்தில், 2011-12 ஆண்டு முதல் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்
நிலைப்பள்ளிகளில், 363 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் விதமாக, ரூ. 12,500 ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் செய்யக்கோரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ந. செந்தில்குமார், மா. சாமூண்டிஸ்வரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின், பணி செய்வேன் சொன்ன வாக்குறுதியை வலியூறுத்தி கோஷமிட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி