சிவகங்கை: மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிக்கு காரைக்குடி வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ரிஹானா மற்றும் லாவண்யா தகுதி பெற்றுள்ளனர். இதற்காக தகுதி சுற்றில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியின் இரட்டையர் பிரிவில் வித்யா கிரி பள்ளி மாணவிகள் லாவண்யா_ ரிஹானா ஜோடி மாவட்ட அளவில் சாதனை படைத்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சிவகங்கையில் நடைபெற்றது. இதில் 8 மண்டலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் இறகு பந்து போட்டி இரட்டையர் பிரிவில் காரைக்குடி வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 9_ம் வகுப்பு மாணவி லாவண்யா, 7_ம் வகுப்பு மாணவி ரிஹானா இருவரும் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவப்பிள்ளைகளை பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டி மாநில அளவில் வெற்றி பெற வாழ்த்தினர். புகைப்படம் செய்தி. மாநில அளவில் நடைபெறப்போகும் இறகு பந்து போட்டிக்கு சிவகங்கை மாவட்ட அளவிலான போட்டியில் வென்று முதலிடம் பிடித்த காரைக்குடியை வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் லாவண்யா மற்றும் ரிஹானா ஆகிய இருவரும் பள்ளி ஆற்றல் மிக்க முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதனிடம் வாழ்த்து பெற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி