சிவகங்கை: உள்ளாட்சிகள் தினமான (01.11.2024) அன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம், அத்தினத்தை முன்னிட்டு வருகின்ற 23.11.2024 அன்று நடத்தப்பட வேண்டும் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராம சபைக் கூட்டத்தினை, ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி வருகின்ற (23.11.2024) அன்று காலை 11.00 மணியளவில் அரசாணை (நிலை) எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நாள் (25.09.2006)-ல் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அன்றைய கிராம சபைக் கூட்டத்தில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் (23.11.2024) அன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு, அவ்வூராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய் கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு மற்றும் கூட்டாண்மை வாழ்வாதாரம் ஆகியவை கிராம சபை கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்படவுள்ளது.
எனவே, உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, வருகின்ற (23.11.2024) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி