செங்கல்பட்டு : பள்ளிக்கல்வித்துறை நடத்திய குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினம் விளையாட்டு போட்டிகள் செங்கல்பட்டு மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் வண்டலூர் ஓட்டேரி விரிவு பகுதியில் சில ஆண்டுகளாக செங்கை தமிழன் ஆல் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் என்ற அமைப்பின் கீழ் மகா குரு ஜே. சாகுல் ஹமீது
தலைமையாசான் எஸ்.தமீம் அன்சாரி பயிற்சியாளர்கள் எம். ரசூல் மொய்தீன் ஆ. லட்சுமணன் பெண் பயிற்சியாளர் எஸ். ஜெய்பூன் நிஷா ஆகியோரால் சிலம்ப பயிற்சி வகுப்பு சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சில ஆண்டுகளாக தொடர்ந்து தமிழக முதலமைச்சர் கோப்பை பள்ளி கல்வித்துறை நடத்தக்கூடிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தனியார் பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடிய போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று வருகின்றனர். மற்றும் அதேபோல் இந்த ஆண்டும் செங்கல்பட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு இடையேயான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர்.
இதில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் T.A.வருண்(19) வயதுக்குட்பட்ட 65-70 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும் V. விபாணி(14) வயதுக்குட்பட்ட 35-40 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கமும் M.சக்தி (19) வயதுக்குட்பட்ட 50-55 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும்
T.கார்த்திகேயன் (19) வயதுக்குட்பட்ட 45-50 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும்
M. லக்ஷனாஸ்ரீ (17) வயதுக்குட்பட்ட 35-40 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும்
. D. நித்திஷ் (14) வயதுக்குட்பட்ட 35-40 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும்
A. சந்தனம் (14) வயதுக்குட்பட்ட 30-35 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும்
R. அப்ராஸ் ராஜிம் (17) வயதுக்குட்பட்ட 55-60 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும்
. S.M.ஜிகாப் ஆகில் (17) வயதுக்குட்பட்ட 55-60 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும்
. M.S. அகல்யா (17) வயது குட்பட்ட 60 கிலோ எடைக்கு மேற்பட்ட பிரிவில் வெண்கல பதக்கமும்
K. ஹேமஸ்ரீ (14) வயதுக்குட்பட்ட 35-40 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும்
வழங்கப்பட்டது இதில் 1500க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்