செங்கல்பட்டு : மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அவர்களுக்கு பாரதி ஜனதா கட்சி மாநில பேச்சாளர் சாமுவேல் அவர்கள் அங்குள்ள பொது மக்களுக்கு விளையாட்டு திடல் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். இதில் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி சர்வே எண். 51-ல் பல ஆண்டுகளாக ஆதிதிராவிட இளைஞர்கள், அடக்குமாடிக் குடியிருப்பு இளைஞர்கள் மற்றும் அருகிலுள்ள தையூர், படூர், கோவளம், புதுப்பாக்கம், வெளிச்சை கிராமங்களிலுள்ள 1000-க்கு மேற்பட்ட இளைஞர்கள் டாக்டர் அம்பேத்கர் விளையாட்டுத் திடலை உருவாக்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த இடத்தில் கால் நடை மருத்துவமனை வருவதாகக் கேள்விப்பட்டு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மனுக்களைக் கொடுத்தும் மறுபடியும் சர்வே எண்.51-ல் கால்நடை மருத்துவமனை அமைத்திட பணிசெய்ய ஆணைகொடுக்கப்பட்டது. அதை கேள்விப்பட்டு அதிர்ச்சியளிக்கிறது.
ஆகவே அவர்கள் கேளம்பாக்கம் பரப்பளவு குறைவாகவும், மக்கள் தொகை எண்ணிக்கை அதிகமாகவும் உள்ள சிறிய ஊராட்சி இதில் ஏற்கனவே குப்பைக்கிடங்கு குடிநீர்த் திட்டம் போன்ற பெரிய திட்டங்களை இச்சிறு ஊராட்சியில் திணிப்பது சற்று கவலையளிக்கிறது. ஆகவே திருப்போரூர் சட்ட மன்றத்தில் பரப்பளவு அதிகமாகவும், மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாகவும் உள்ள ஊராட்சிகள் நிறைய இருக்கிறது. எனவே இத்திட்டத்தினை மறுபரிசீலனைச் செய்து கேளம்பாக்கம் ஊராட்சியிலுள்ள இளைஞர்கள் பொது மக்களிடம் கருத்துக்களைக் கேட்டு தமிழக அரசிடம் சமர்ப்பித்து மாற்று இடத்தில் இத்திட்டத்தினைச் செயல்படுத்தும்படி அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்