செங்கல்பட்டு: மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணுபிரியா நகரில் உள்ள பாண்டியன் கராத்தே மற்றும் சிலம்பம் அகாடமி சார்பில் செங்கல்பட்டு மற்றும் ஊரப்பாக்கத்தில் நடந்த மாநில கராத்தே போட்டியில் 42 மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். இதில் 12பேர் முதல் பரிசும், 14பேர் இரண்டாம் பரிசும், 16பேர் மூன்றாம் பரிசும் பெற்றனர். இதனை பாராட்டும் வகையில் விஷ்ணுபிரியா நகர் கராத்தே அகாடமியில் பாராட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் அகடாமியின் நிறுவனர் கராத்தேபாண்டியன் தலைமை தாங்கினார். தலைமை பயிற்ச்சியாளர்கள் சிவபாலன், மோனிஷா, அமுதாபாண்டியன், விஜயன், அன்பு, பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அகடாமியின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.ஹைதர் அலி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் கோகுல்ராம், மாதேஷ், வசீம், சேஷாசினி, அபினேஷ் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் அகடாமியின் ஆலோசகர் லியாகத்அலி நன்றி கூறினார்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்