காரைக்காலில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் அங்கமாக புகையிலை விழிப்புணர்வு பற்றி ஓவியப் போட்டி, கட்டுரை போட்டி, Reels மற்றும் முழக்கம் எழுதும் போட்டியும் நடத்தி பரிசளிக்கப்பட்டது. முன்னதாக மாணவர்கள் அனைவரும் புகையிலை இல்லாத கல்லூரி வளாகத்தை உருவாக்குவேன் என்று உறுதிமொழி ஏற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக Dr. Kesavan Medical officer, Kavitha Health inspector, PHC Nedungadu கலந்து கொண்டு மாணவர்களுக்கு புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தார். பின்னர் கல்லூரியின் முதல்வர் Dr.M.Aramudhan, அவர்கள் கலந்து கொண்டு PKIET யை புகையிலை மற்றும் போதையற்ற வளாகமாக மாற்ற கல்லூரி நிர்வாகமும் நாட்டு நலப்பணித் திட்ட அலகுகளும் இணைந்து பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
மேலும் மாணவர்கள் இத்தீய பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்கவும் அதிலிருந்து விடுபடவும் கல்லூரி நிர்வாகம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் Dr.S.Manikandan,நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Dr. M. தாமோதரன் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள் ஆய்வக ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட தண்ணார்வளர்கள் மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் Mr.M.Pravin Kumar, Mr.K.Gnanamurugan மற்றும் ஆய்வக உதவியாளர் திரு N. லட்சுமி நாராயணன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி