செங்கல்பட்டு : தாம்பரம் மாடம்பாக்கத்தில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த நினைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து. விவசாயிகளின் காவலர் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் இராசேந்திரன் B.A.B.L.Ex-M.P அவர்களின் தலைமையில் தாம்பரம் பதுவஞ்சேரி- மப்பேடு சந்திப்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாய பெருங்குடி மக்களும், பொதுமக்களும் , கழக தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். “இதில்” நகரகழக இலக்கியஅணி காந்திநகர் 8வதுவார்டு அஇஅதிமுக மறைமலைநகர் நகரம் சார்பாக கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்