சென்னை: சென்னை, 19 நவம்பர் 2024: உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னோடி நிறுவனமாக விளங்கும், NAAC A+ தரச்சான்றளிக்கப்பட்ட ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் (HITS), 2025-26 கல்வியாண்டுக்கான சேர்க்கைகளை அறிவித்துள்ளது. அதனுடன், ரூ. 5 கோடி அளவிலான திறனாய்வு அடிப்படையிலான உதவித்தொகை திட்டத்தையும் அறிவித்து, திறமையான மாணவர்கள் அனைவருக்கும் கல்வி வாய்ப்பை வழங்குதல் மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான உறுதியை வலுப்படுத்தியுள்ளது. K.C.G. வெர்கீஸ் திறன் உதவித்தொகை: +2 தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு 100% கட்டண தள்ளுபடி. விளையாட்டு மேம்பாட்டு உதவித்தொகை, திறமையான விளையாட்டு வீரர்களுக்கு 100% கட்டண தள்ளுபடி, இலவச தங்குமிடம், மற்றும் தொழில்முறை பயிற்சி.
பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வீரமரணத்தைச் சந்தித்தவர்களின் குழந்தைகள், சிறப்பு தேவைகள் கொண்ட மாணவர்கள், மற்றும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி உள்ள மாணவர்களுக்கு ஆதரவு. HITSEEE (HITS Engineering Entrance Examination)இத்தேர்வு B.Tech, B.Arch, B.Des மற்றும் M.Tech ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகளுக்கு திறமையான மாணவர்களை தேர்வு செய்வதற்கான முழுமையான மதிப்பீட்டு தளமாக செயல்படுகிறது. தேர்வு தேதிகள் ஏப்ரல் 28 – மே 3, 2025, கடைசி தேதி ஏப்ரல் 25, 2025, ஆலோசனை (Counselling) மே 12 – மே 19, 2025, வகுப்புகள் தொடங்கும் தேதி ஜூலை 2025 HITSCAT (HITS Common Aptitude Test) எஞ்சிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர்களை தேர்வு செய்ய இது ஒருங்கிணைந்த தளமாக செயல்படுகிறது. தேர்வு தேதிகள், மே 19 – மே 20, 2025, ஆலோசனை, ஜூன் 2 – ஜூன் 9, 2025, வகுப்புகள் தொடங்கும் தேதி ஜூலை 2025. கல்விசார் மேன்மை மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புகள் 1985 – ம் ஆண்டில் நிறுவப்பட்ட HITS பொறியியல், லிபரல் ஆர்ட்ஸ், மேலாண்மை, வடிவமைப்பு மற்றும் நலவாழ்வு அறிவியல் ஆகிய பிரிவுகளில் 100-க்கும் அதிகமான கல்வித்திட்டங்களை வழங்கி உயர்கல்வியின் கலங்கரை விளக்காக திகழ்கிறது.
மிக நவீன ஆராய்ச்சி மையங்கள், உலகத்தரம் வாய்ந்த பரிசோதனையகங்கள் மற்றும் கிராண்ஃபீல்டு யுனிவர்சிட்டி (யுகே ) மற்றும் டாங்கக் யுனிவர்சிட்டி (தென் கொரியா) போன்ற உலகளவில் பிரபலமான உயர்கல்வி நிறுவனங்களுடன் முக்கியமான ஒத்துழைப்பு நடவடிக்கைகள் உட்பட, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இப்பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. HITS – ன் வேந்தர் டாக்டர். ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் பேசுகையில், “சமுதாயத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கு திறனும், தகுதியும் உள்ள சிறந்த தொழில்முறை நிபுணர்களை உருவாக்குவதில் HITS தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. புத்தாக்கம், உலகளாவிய செயல்பாடுகள் மீது நல்ல பரிச்சயம் மற்றும் தொழில்துறை தேவைகளுக்குப் பொருத்தமான கல்வி ஆகியவை மீது நாங்கள் காட்டி வரும் கூர்நோக்கம், எதிர்காலத்தை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய திறன் உள்ளவர்களாக எமது மாணவர்கள் இருப்பதை உறுதி செய்கிறது.” என்று வலியுறுத்தினார். அங்கீகாரம் மற்றும் தரவரிசைகள்:- NIRF 2025 பட்டியலில் பொறியியல் பிரிவில் தரவரிசையில் 101-150 என்ற குழுவிற்குள்ளும், ஆசியாவில் 751-800 மற்றும் தெற்காசியாவில் 240 என்ற தரவரிசை இடத்திலும் HITS இருக்கிறது. பொறியியல் கல்வி திட்டங்களுக்காக IET (UK) மற்றும் NBA ஆகியவற்றின் அங்கீகாரத்தையும் இது பெற்றிருக்கிறது.
கல்வி மற்றும் கரியர் வளர்ச்சியில் உயர்மேன்மையை அடைய வேண்டுமென விரும்புகின்ற மாணவர்கள் முன்னதாகவே விண்ணப்பிக்குமாறும் மற்றும் இப்பல்கலையில் வழங்கப்படும் கல்வித்திட்டங்கள் மற்றும் கிடைக்கும் வசதிகளை ஆராய்ந்தறிய பல்கலை வளாகத்திற்கு நேரில் வருகை தரவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்