மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் சீர்மரபினர் நல வாரிய மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள. சங்கீதா ,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை இயக்குனர் சம்பத் , கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) மோனிகா ரானா, உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி