திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலில் 75 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீச கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இதனை அடுத்து மீன்வளத் துறை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டு அனைத்து மீனவ கிராமங்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர். இதனால் சுமார் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நேற்று இரவு 7 மணி அளவில் மீன் வளத்துறை மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என கடிதம் அனுப்பியதன் காரணமாக இன்று காலை மீன் பிடிக்க செல்ல வேண்டிய மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
நேற்று கடலுக்கு சென்ற மீனவர்களையும் உடனடியாக கடலிலிருந்து கரைக்கு திரும்பவும் மீனவர்கள் அறிவுறுத்துள்ளனர்.
இதன் காரணமாக பழவேற்காடு மீன் மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைந்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டோம் என தெரிவித்துள்ளனர். வங்கக் கடலில் நிலவி வரும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பழவேற்காடு அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகங்களிலும் எண்ணூர் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு