செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மறைமலை நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு வழக்கறிஞர்கள்
ஜெகதீசன் அவர்களை நெஞ்சில் அடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தி,
வாட போடா உள்பட பல ஆபாசமான வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்த மறைமலை நகர் குற்றப்பிரிவு காவல்ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மீது வழக்கு பதிவு (FlR) செய்து கைது செய்ய வழியுறுத்தி செங்கல்பட்டு வழக்கறிஞர் சங்கம் (CBA)சார்பாக நீதிமன்ற புறக்கணிப்பு செய்து செங்கல்பட்டு நீதிமன்ற நுழைவாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு வழக்கறிஞர் சங்கத்தலைவர் , ஆனந்திஸ்வரன், செயலாளர். குமரேசன். துணை தலைவர் இளங்கோவன். முன்னால் வழக்கறிஞர் தலைவர் போர்வாள் சோமசுந்தரம். மற்றும் இதனை தொடர்ந்து கூடுவாஞ்சேரியில் உள்ள காவல் துணை ஆனையர் அவர்களிடத்திலும், மறைமலைநகர் காவல் ஆய்வாளரிடத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆனையரும், ஆய்வாளரும் புகார் மனுவை பெற்றுக்கொண்டு உறுதியளித்துள்ளனர்.
காவல் நிலை ஆணை எண் 562(ii) சிவில் நேர்வு உள்ள வழக்குகளில் காவலர் விசாரணை தடை செய்யப்பட்டுள்ளது. என்கிற உத்தரவு உள்பட சிவில் வழக்குகளை காவல்நிலையத்தில் விசாரிக்கக்கூடாது என்று பல உத்தரவுகள் இருந்த நிலையில் பேரமனூர் காந்தி நகரை சேர்ந்த 65 வயதை உள்ளே. ராஜேஸ்வரி என்ற மூதாட்டியை கடந்த (25.11.2024) அன்று காவல் நிலையத்திற்கு வர வைத்து மிரட்டி விசாரித்துள்ளார்கள். இது சிவில் வழக்கு இதை ஏன் நீங்க விசாரிக்கின்றீர்கள், ஏற்கனவே அந்த மூதாட்டிதாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவ சீட்டோடு வந்து புகார் கொடுத்ததையே நீதிமன்றத்துக்கு போங்க என்று சொல்லி அனுப்பி வைத்த தாங்கள், சிவில் சம்மந்தப்பட்டதை விசாரிப்பது சரியா சார். நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டியதுதானே சார் என்று 65 வயதை கடந்த மூதாட்டியின் இப்படி காவல்நிலத்துக்கு வரசொல்லி அலைகழிக்கின்றனர்.
வழக்கறிஞரான ஜெகதீசன் அவர்கள் கேட்தற்கு.தான் தனது வீரதீர செயலை 5, 6 காவலர்களை உடன் வைத்துக்கொண்டு மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளார் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார். அவர் விசாரனை செய்த போது காவலர்களுக்கு உரிய காக்கி உடை அணியாமல் கருப்பு சட்டையில் கையில் காப்புடன் லத்தியை வைத்துக்கொண்டு மிரட்டி விசாரணை செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் காவல் நிலையத்தில் வந்து பேசுகிற வழக்கறிஞர்களுக்கு இல்லாதவனுங்க என்று வழக்கறிஞர்களை இழிவாக பேசியுள்ளார். காவலர்களின் அராஜக செயலால் அதிர்ச்சியில் காவல் நிலையத்தில் வெளியே நின்றிருந்த வழக்கறிஞரை ஆம்பளையா இருந்தா உள்ளே வாடா , கை கால்கள் உடைத்து லாக்கப்பில் போடுகிறேன் என்று ஆவேசமாக லத்தியை எடுக்க பாய்ந்துள்ளார். இதை எல்லாம் உடன் சென்ற வழக்கறிஞர் செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார். குற்ற பிரிவு ஆய்வாளரால் தாக்கப்பட்ட வழக்கறிஞர் ஜெகதீசன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீது சீருடை போட்ட/போடாத ரவுடிகளின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவது நீதிமன்ற பணிகளுக்கு (நீதிபதிகள்) வழக்கறிஞர்கள் .காவலர்கள்) உகந்தது அல்ல என்பது உள்பட பல கருத்துக்களை செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் கூடுவாஞ்சேரியில் உள்ளே காவல் உதவி ஆணையரிடத்தில் முன்வைத்து, குற்றப்பிரிவு ஆய்வாளர். கிருஷ்ணகுமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி பேசி மனுகொடுத்துள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்